×

நாடி நரம்பெல்லாம் ஜூலி வெறி ஊறிப்போன ஒருத்தரால தான் இப்டி பண்ணமுடியும்!

ஒட்டுமொத்த தமிழகமும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கிய நேரத்தில் ஒரு பெண்அரசாங்கத்தை எதிர்த்து ஆவேசமாக பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளம் எங்கும் மின்னல் வேகத்தில் பரவி வந்தது. வீரத்தமிழச்சி என்ற பெயரில் அனைவரும் அந்தப்பெண்ணின் பேச்சை நண்பர்களுடன் பகிர்ந்து தங்களது குரல்களை எழுப்பி வந்தனர். தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய அந்தப் பெண்ணை பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக உள்ளே களமிறக்கினர். ஆம் நமது ஜூலி தான். பிக் பாஸ் ஜூலி என்று சொன்னால்
 

ஒட்டுமொத்த தமிழகமும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கிய நேரத்தில் ஒரு பெண்அரசாங்கத்தை எதிர்த்து ஆவேசமாக பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளம் எங்கும் மின்னல் வேகத்தில் பரவி வந்தது. வீரத்தமிழச்சி என்ற பெயரில் அனைவரும் அந்தப்பெண்ணின் பேச்சை நண்பர்களுடன் பகிர்ந்து தங்களது குரல்களை எழுப்பி வந்தனர்.

தமிழில் பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய அந்தப் பெண்ணை பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக உள்ளே களமிறக்கினர். ஆம் நமது ஜூலி தான். பிக் பாஸ் ஜூலி என்று சொன்னால் என்றும் சரியாக இருக்கும். பின்னர் போகப்போக வீட்டிற்குள் பல சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தன. வெளியே வந்ததும் தமிழகம் முழுக்க பிரபலமான ஜூலி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில படங்களிலும் நடித்து வந்தார். ஜல்லிக்கட்டு சமயத்திலே பலரது மனதை கவர்ந்த அவருக்கு பிக்பாஸ் இன்னும் சில ரசிகர்களை பெற்றுத் தந்தது.

தற்போது ஜூலியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எவ்வளவு வெறி கொண்ட ரசிகர் என்றால் பூஜை அறையில் தெய்வங்கள் படத்திற்கு நடுவில் ஜூலியின் புகைப்படத்தையும் வைத்து வணங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் ஜூலியின் புகைப்படத்தை மொபைல் பின்புற கேஸிலும் அச்சிட்டுள்ளார். ஜூலிக்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகர் இருப்பதைப் பார்த்த பிற நடிகர்களின் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.