×

சன் டிவியுடன் பிரச்சினையா? சித்தி 2 சீரியல் முடிவுக்கு வருகிறதா!?

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிகவும் அதிக வரவேற்பைப் பெற்ற சீரியல் என்றால் அது சித்தி தான். தற்போது 22 ஆண்டுகள் கழித்து சித்தி பாகத்தின் இரண்டாம் பாகம் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ராதிகா, நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ராதிகாவின் ராடான் நிறுவனம் சித்தி 2 சீரியலை தயாரித்து வருகின்றது. தற்போது சித்தி 2 சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில் சித்தி 2 சீரியல் சில பிரச்சினைகள்
 

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிகவும் அதிக வரவேற்பைப் பெற்ற சீரியல் என்றால் அது சித்தி தான்.

தற்போது 22 ஆண்டுகள் கழித்து சித்தி பாகத்தின் இரண்டாம் பாகம் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ராதிகா, நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ராதிகாவின் ராடான் நிறுவனம் சித்தி 2 சீரியலை தயாரித்து வருகின்றது.

தற்போது சித்தி 2 சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில் சித்தி 2 சீரியல் சில பிரச்சினைகள் காரணமாக முடிவுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

“தயவுசெய்து நீங்கள் தெளிவுபடுத்துங்கள் ராதிகா.
சேனல் அழுத்தம் காரணமாக சித்தி 2 விரைவில் முடிவடைய உள்ளதாக சமூக ஊடகங்களில் நிறைய செய்திகள் பரவுகின்றன. இது உண்மையா அல்லது வதந்தியா? உங்கள் தரப்பிலிருந்து நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறோம்” என்று பயனர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராதிகா சித்தி 2 முடிவடைய இருப்பதாக வெளியான செய்திகள் போலியானவை என்று தெரிவித்துள்ளார்.