×

‘கலக்கப்போவது யாரு‘ புகழ் தீனாவிற்கு திருமணம்.. பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து !

 

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. 

சின்னத்திரையில் டைமிங் காமெடியால் புகழ்பெற்றவர் தீனா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு வரும் தொகுப்பாளர் முதல் செலிப்பிரிட்டி வரை அனைவரையும் தொலைப்பேசி வாயிலாக கலாய்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

சின்னத்திரையில் கலக்கி வந்த அவர், தற்போது சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். ‘தும்பா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய ரீச் கொடுத்தது. அதன்பிறகு மாஸ்டர், புலிக்குத்தி பாண்டி, அன்பறிவு, விக்ரம், உடன்பால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் கூட தனது சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி குடியேறினார். இந்நிலையில் நடிகர் தீனாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. பெற்றோர் பார்த்த வைத்த பெண்ணாக பிரகதி என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். அவர் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊரான திருவாரூரில் நடைபெற்ற இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.