புற்றுநோயால் பலமுறை மூளையில் ஆபரேஷன்... போராடி உயிரிழந்த மலையாள நடிகை
சின்னத்திரை நடிகை சரண்யா சசி மரணமடைந்தது சீரியல் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் சரண்யா சசி. சீரியல்களோடு சினிமா படங்களில் நடித்துள்ளார். தமிழில் கீரா இயக்கத்தில் பச்சை என்கிற காத்து என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்து பள்ளிப்படிப்பை இங்கேயே முடித்தார். அதன்பிறகு ஐதராபாத்தில் கல்லூரி படிப்பை முடித்து ‘சூர்யோதயம்’ என்ற மலையாள சீரியல் மூலம் அறிமுகமானார்.
சீரியல்களில் பிசியாக இருந்து வந்த சரண்யா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளைப்புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்து செலவுக்காக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வந்தார். இதையடுத்து சீரியல்கள் நடிகர், நடிகைகளும், நண்பர்களும் அவருக்கு நிதியுதவி செய்து வந்தனர். பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
35 வயதான சரண்யாவுக்கு, மூளையில் உள்ள கட்டியை அகற்ற இதுவரை 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே ஒய்வெடுத்து நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரானா தொற்றும் ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தப்போதிலும் நாளுக்குநாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மலையாள சீரியல் உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.