×

 தீபாவுக்கு திரும்பி வராத நினைவுகள்.. ஐஸ்வர்யாவை சுற்றி வளைக்கும் போலீஸ்  - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 
 

 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் தான்  தேவைப்படுகிறது என அவளை பாடுவதற்காக மேடை ஏற்றி உட்கார வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது தீபா மேடை ஏற்றப்பட்ட பிறகும் சுயநினைவு வராமல் பித்து பிடித்தார் போல் உட்கார்ந்து இருக்க தீபாவின் அம்மா ஜானகி, மைதிலி, அபிராமி ஆகியோர் அவளிடம் உருக்கமாக பேசி நினைவுகளை திருப்பி கொண்டு வர முயற்சி செய்கின்றனர். 

இன்னொரு பக்கம் போலீஸ் ஐஸ்வர்யாவை சுற்றி வளைக்க  முயற்சி செய்ய இதன் ஒரு ரூமுக்குள் சென்று அங்கிருக்கும் பைக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறாள். பிறகு போலீஸ் அங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் அந்த ரூமுக்கு வந்து பார்க்க அங்கே அந்த பை இல்லாமல் போக பையின் உரிமையாளரை தேடி கண்டுபிடித்து உங்களிடம் தனியாக பேச வேண்டும் என ரூமுக்கு அழைத்துண்டு அந்த பெண்மணியை அடித்து பேக்குக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறாள்.

தீபாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் சக்தி நர்சை பார்ப்பதற்காக ஆசிரமத்திற்கு வருகிறார். சக்தி வெளியே சென்றிருப்பதாக சொல்ல இந்த ரிப்போர்ட்டை அவரிடம் கொடுத்து விடுங்கள் என கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

அதைத் தொடர்ந்து தீபாவிடம் அவரது அப்பா தர்மலிங்கத்தின் போட்டோவை காட்டி அவர்களது பாசத்தைப் பற்றி பாடகி கனவு பற்றியும் எடுத்து சொல்லி தீபாவுக்கு பழைய நினைவை கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அப்போதும் எந்த பயனும் இல்லாமல் தீபா அப்படியே இருக்கிறாள். 

பிறகு சக்தி நர்ஸ் உள்ளே வர ஜானகி மைதிலி ஆகியோர் தீபா கிடைக்க நீங்கதான் முக்கிய காரணம் என நன்றி சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.