கொடிய நோய்க்கு ஆளாகும் தனம்... மீனாவிற்கு தெரிய வரும் உண்மை !
தனத்திற்கு கொடிய நோய் இருப்பதாக கண்டறியப்படுவதால் அதை கேட்கும் மீனா அதிர்ச்சி அடைகிறார்.
விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. நான்கு அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களது உறவுகளை மையமாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்தப் பிரச்சனை வந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது தான் சீரியலின் கதைக்களம்.
ஆனால் திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனித்தனியாக பிரிந்த அண்ணன் தம்பிகளில் ஜீவா மட்டும் இணையாமல் இருக்கிறார். இதற்கிடையே முல்லை கர்ப்பமாக இருக்கும் நிலையில் வில்லனால் கீழே விழுகிறார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முல்லைக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்த மகிழ்ச்சி முடிவதற்குள் சோக சம்பவம் ஒன்று நடைபெறுகிறது. நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்க்கிறார். அப்போது தனத்தை பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிகின்றனர். இதனால் தனம் இடிந்து போய் தனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என வருந்துகிறார். அப்போது அங்கு வரும் மீனா, தனத்தின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இப்படி பரபரப்பான கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நகர்ந்து வருகிறது.