×

1200 எபிடோடுகளை கடந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'... சாதனையை கொண்டாடிய சீரியல் குழுவினர் !

 

 பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 1200 எபிடோடுகளை கடந்து சென்றுள்ளது. 

விஜய் டிவியில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல். விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆயிரம் எபிசோடுகளை கடந்து செல்லும் இந்த சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 1200 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சாதனை சீரியல் குழுவினர் கேக் கொண்டாடியுள்ளனர். இந்த சாதனை குறித்து சீரியலின் இயக்குனர் சிவசேகர் பேசியபோது, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் புதிய மயில் கல்லை எட்டியதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தத் தொடரின் முழுமையான பயணம் என் கெரியருக்கு உயிர் கொடுத்தது என்று கூறினார். 

'பாண்டியன் ஸ்டோர்' தற்போதைய கதைப்படி பல அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. ஒன்றாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது தனிதனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் இந்த சீரியலை முடிக்க விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.