×

ஜீ தமிழில் பொங்கல் கொண்டாட்டம்... வரிசை கட்டும் புதுப்படங்கள்...

 

தமிழ் சின்னத்திரை முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த வருட பொங்கலுக்கு போகி பண்டிகை நாளிலிருந்தே சிறப்பு திரைப்படத்துடன் கொண்டாட்டத்தை தொடங்க உள்ளது ஜீ தமிழ். ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று மதியம் 3.30 மணிக்கு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி என எக்கச்சக்கமான திரையில் உலக பிரபலங்கள் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான ஜவான் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. 

அதேபோல, அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி தைத்திருநாள் அன்று மதியம் 12:30 மணி முதல் 4:00 மணி வரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து கலக்கிய மெகா ஹிட் சூப்பர் திரைப்படமான மார்க் ஆண்டனியின் டெலிவிஷன் பிரிமியர் ஒளிபரப்பாக உள்ளது. பிறகு மதியம் 4:00 மணி முதல் 7 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.