×

 ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகைக்கு திருமணம்.. விரைவில் காதலரை கரம்பிடிக்கிறார் !

 

‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.  

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருப்பவர் ரேஷ்மா முரளிதரன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்,  ஜீ தமிழில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் பிரபலமானவர். இந்த சீரியலில் ரேஷ்மாவின் கேரக்டர் ரசிகர்களிடம் புகழ்பெற்றது. சின்னத்திரை வட்டாரத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  

இதையடுத்து தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அபி டெயிலர்’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ரேஷ்மாவுக்கும், இதே சீரியலில் நடித்து வரும் மதன் பாண்டியனும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு தங்களது காதலை வெளியுலகிற்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கம். அப்படி உரையாடும்போது ரசிகர் ஒருவர், ரேஷ்மா திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா,  விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறியுள்ளார். இதனால் ரேஷ்மாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.