இணையத்தில் பரவும் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ஆபாசப்படம்... போலீசில் புகார்
‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகையின் ஆபாசப்படம் ஒன்று இணையத்தில் பரவி வந்த நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரவீணா. சின்னத்திரை உலகில் புகழ்பெற்று இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியல்களை தவிர்த்து சில சினிமா படங்களிலும் பிரவீணா நடித்துள்ளார். இவர் தற்போது பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியலான ‘ராஜா ராணி 2’ சீரியல் தற்போது பிரவீணா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரின் நடிப்பு, இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கும் ஏராளமான பாலோவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை பிரவீணாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசம் புகைப்படம் ஒன்று வேகமாக இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பிரவீணா, உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கன்னியாகுமரி மற்றும் டெல்லியை சேர்ந்த வாலிபர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.