×

கர்ப்பமாக இருக்கும் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா...!

 

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ரோபோ ஷங்கருக்கு, இந்திரஜா ஷங்கர் எனும் ஒரு மகள் இருக்கிறார். இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இந்திரஜா ஷங்கருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.இந்த நிலையில், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவர் ராதா, எப்போது மகிழ்ச்சி செய்தியை எங்களுக்கு சொல்லப்போகிறீர்கள் என இருவரிடமும் கேட்க, இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் இருவரும் தாய், தந்தை ஆகப்போகிறோம் என கூறி, தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்கிற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளார்.இதன்பின் நிகழ்ச்சிக்கு வந்த ரோபோ ஷங்கர், இங்கு இருப்பதிலேயே நான் தான் மிகவும் Young தாத்தா என கூறி, அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் இணைந்து கார்த்திக் - இந்திரஜா தம்பதியை வாழ்த்துகின்றனர்.