×

 சண்முகத்தை அவமானப்படுத்திய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

 

 தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியின் கல்யாண நாளை கொண்டாட இசக்கி மற்றும் பாக்கியம் சீருடன் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது குடும்பத்தினர் எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர், பரணிக்காக கொண்டு வந்த சீரை கொடுத்து ஆனந்தம் கொள்கின்றனர். அப்படியே மறுபக்கம் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா காரில் வந்து கொண்டிருக்க பாண்டியம்மா ஷண்முகம், பரணியை ஒண்ணா சேர விட கூடாது. இவங்களை பிரிக்க என் கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று சொல்கிறாள். 

அதாவது பரணி இன்னும் பிள்ளை பெத்துக்கல, அவங்க அன்னோன்யமான புருஷன் பொண்டாட்டியாகவே வாழல என்று சொல்கிறாள். இதை வைத்தே அந்த ஷண்முகம் மீது குறையை சொல்லி பிரித்து விடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். உடனே இருவரும் ஷண்முகம் வீட்டிற்கு வந்து ஷண்முகம் ஆம்பளையே இல்லை என்பது போல் பேசி காயப்படுத்துகின்றனர், ஷண்முகம் கோபப்பட பரணி அவனை சமாதானம் செய்கிறாள். பிறகு ஷண்முகம் இதை நினைத்து வருத்தத்தில் இருக்க பரணி அவனிடம் கோபமாக அவங்க அப்படி பேச என்ன காரணம்? நாம என்ன புருஷன் பொண்டாட்டி மாதிரியா இருக்கோம் என்று ரொமான்டிக்காக பேச ஷண்முகம் கோபமான அதை கேட்டபடி இருக்கிறான்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து  அண்ணா சீரியலில் பொறுத்து இருந்து பார்க்கலாம்.