×

டிஆர்பி-யில் விஜய் டிவியை ஓரங்கட்டிய சன் டிவி… பிக்பாஸ் தான் காரணமா!?

ஊரடங்கால் தியேட்டர்கள் முடங்கியுள்ளதைப் பயன்படுத்தி ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவில் மார்க்கெட்டைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க டிவி சேனல்களும் டிஆர்பி-யில் முதல் இடத்தைப் பிடிக்க மல்யுத்தம் நடத்தி வருகின்றனர். இந்தப் போட்டி செனல்களுக்கிடையே காலம் காலமாக நடந்து வருகிறது என்றாலும் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்களை பல்வேறு நிகழ்ச்சிகள் ஈர்த்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த போட்டியிடுகின்றனர். சீரியல் என்றாலே நம்ம ஊரு பெண்மணிகளுக்கு சன்டிவி தான் முதலில்
 

ஊரடங்கால் தியேட்டர்கள் முடங்கியுள்ளதைப் பயன்படுத்தி ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவில் மார்க்கெட்டைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க டிவி சேனல்களும் டிஆர்பி-யில் முதல் இடத்தைப் பிடிக்க மல்யுத்தம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போட்டி செனல்களுக்கிடையே காலம் காலமாக நடந்து வருகிறது என்றாலும் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்களை பல்வேறு நிகழ்ச்சிகள் ஈர்த்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த போட்டியிடுகின்றனர்.


சீரியல் என்றாலே நம்ம ஊரு பெண்மணிகளுக்கு சன்டிவி தான் முதலில் நினைவுக்கு வரும். எனவே எப்போதும் டிஆர்பி-யின் ராஜாவாக சன் டிவி இருந்து வந்தனர். விஜய் டிவி உள்ளே நுழைந்தவுடன் இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் பல சீரியல்கள் தயாரித்து சன் டிவியை சிறிது அசைத்து பார்த்தனர். பின்னர் காமெடி டான்ஸ் என விதவிதமாக நிகழ்ச்சிகள் மூலம் டிஆர்பி-யில் முதலிடத்தைப் பிடித்தனர்.


விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்ததிலிருந்து பிக்பாஸ் ஒளிபரப்பாகும் மூன்று மாதங்கள் எப்போதும் விஜய் டிவி டிஆர்பி முதலிடம் பிடித்து விடுவது வழக்கமாகி வருகிறது. சன் டிவி-யும் பல நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர நினைத்தனர். ஆனால் அவர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.


ஆனால் பிக்பாஸ் சீசன் சற்று கலை இழந்து சற்று தொய்வாக போய்க் கொண்டிருப்பதால் மக்களுக்கு பிக்பாஸ் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே மக்கள் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை பார்க்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே சன் டிவியின் டிஆர்பி மறுபடியும் உயர ஆரம்பித்து விஜய் டிவியை ஓரங்கட்டியிருக்கிறது.