பொன்னி எடுத்த அதிரடி முடிவு ?... புதிய திருப்பங்களுடன் ‘வானத்தை போல’ !
பொன்னி எடுத்த முடிவால் ‘வானத்தை போல’ சீரியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘வானத்தைப் போல’. சன் டிவியில் ப்ரைம் டைமில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் அண்ணனாக சின்ராசு கதாபாத்திரத்தில் ஸ்ரீகுமாரும், தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் மான்யாவும் நடித்து வருகின்றனர்.
தற்போதைய கதைப்படி சின்ராசுவின் மாமா, எப்படியாவது சின்ராசுவுக்கு பொன்னியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வைக்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் சின்ராசுவுக்கும், துளசிக்கும் கொஞ்சும் கூட விருப்பமில்லை. அதனால் திருமணத்தை தடுத்து நிறுத்த துளசி முயற்சி செய்து வருகிறார்.
அதேநேரம் துளசியின் கணவர் ராஜபாண்டி, திருமணத்தை நடத்தி போராடிக் கொண்டிருக்கிறார். இப்படி பரபரப்பு திருப்பங்களுடன் சீரியல் சென்றுக் கொண்டிருக்க, திடீரென பொன்னி ரூமுக்கு சென்று கதவை மூடிக் கொள்கிறார். இதனால் அடுத்து என்னவாகும் என்ற பரபரப்பு சீரியலில் தொற்றிக் கொண்டுள்ளது.