×

தமிழ் வெற்றி பெறுவாரா ?.... பரபரப்பான கட்டத்தில் 'தமிழும் சரஸ்வதியும்'

 

'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் சீரியலை பார்த்து வருகின்றனர்.  ‌

கூட்டுக்குடும்ப கதைக்களத்தை கொண்டு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் 'தமிழும் சரஸ்வதியும்'. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகிறது. கதைப்படி சொந்த தங்கை கணவரின் கொலை முயற்சித்ததாக  குற்றச்சாட்டி தமிழையும், சரஸ்வதியும் வீட்டை விட்டு கோதை வெளியேற்றுகிறார். 

இதனால் வெளியே செல்லும் தமிழும், சரஸ்வதியும் புதிய கம்பெனி ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த கம்பெனிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் அர்ஜூன். அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் அசோஷேசன் தேர்தலில் போட்டியிடுகிறார். அர்ஜூனின் சதிவேளையால்  கோதையும், தமிழும் எதிரெதிராக தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் மாற்றிமாற்றி சங்க உறுப்பினர்களின் ஆதரவு வருகிறது. கடைசியாக  தமிழுக்கு ஒட்டுமொத்த ஆதரவும் கிடைக்கிறது‌. ஆனால் கெடுக்கும் வகையில் தேர்தல் அன்று சிறு கம்பெனிகள் இருக்கும் பகுதியில் பதவிக்காக தங்கை கணவரை கொலை செய்ய துணிந்தவர் என்று போஸ்டர் ஒட்டப்படுகிறது. தமிழுக்கு எதிராக அர்ஜூன் சதி செய்யும் நிலையில் யார் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.