சௌந்தர பாண்டியின் சட்டையை பிடித்து சவால் விட்ட வைகுண்டம், சண்முகம் எடுத்த முடிவு .... என்ன நடந்தது?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்திடம் ரொமான்டிக்காக நடந்து கொள்ள வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷம் அடைந்தனர். இந்நிலையில், பரணி மற்றும் சண்முகம் இருவரும் வண்டியில் வந்து கொண்டிருக்க பரணி திட்டுவார் என்பதற்காக சண்முகம் பொறுமையாக ஓட்டுகிறான். ஆனால் பரணி ஏண்டா இவ்வளவு பொறுமையாக ஓட்டுற? நீ இப்பொழுது வேகமாக ஓட்டலைனா தான் திட்டுவேன் என்று பேச சண்முகம் வண்டியை வேகமாக ஓட்ட பரணி அவன் தோள் மீது கை போட்டு சந்தோஷமாக செல்கிறார். சௌந்தரபாண்டியனும் ஊர் மக்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது சண்முகம் இடையே செல்கிறார்.
அப்போது, சனியன் நீங்க என்னமோ உங்க பொண்ணு திரும்பி வந்துருவானு சொல்லிட்டு இருக்கீங்க ஆனா அவ அவனை லவ் பண்ணி குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவா போல என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்படுகிறார். சண்முகம் பிரசிடென்ட் ஆகி சொன்னா மாதிரி எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறான். அதனால அவனே தர்மகத்தாவாகவும் இருக்கட்டும் என சுற்றியிருந்தவர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரபாண்டி ஓடிப்போனவன் பையன் எல்லாம் தர்மகத்தா ஆக முடியுமா அவமானப்படுத்தி பேச வைகுண்டம் சௌந்தரபாண்டியின் சட்டையை பிடித்து என் பையன் தேர்தல்ல நின்னு ஜெயிச்சு தர்ம கர்த்தா ஆவான் என்று சவால் விடுகிறார்