×

காதலரை மணமுடித்த சின்னத்திரை நடிகை வைஷ்ணவி ராஜசேகரன்

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷ்ணவி ராஜசேகரன் தனது காதல் கணவருடன் மணமுடித்துக் கொண்டார். டிக் டாக் செயலி இருந்தபோது கார்ட்டூன் கதாபாத்திரமான சின்ஷான் வசனங்களை பொருத்தமாக பேசி பிரபலமானவர் சீரியல் நடிகை வைஷ்ணவி ராஜசேகரன். இவர் டிக் டாக் மூலம் பிரபலமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை மூலம் அறிமுகமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வைஷ்ணவி . இவருக்கு கடந்த செப்டம் பர் மாதம்
 

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷ்ணவி ராஜசேகரன் தனது காதல் கணவருடன் மணமுடித்துக் கொண்டார்.

டிக் டாக் செயலி இருந்தபோது கார்ட்டூன் கதாபாத்திரமான சின்ஷான் வசனங்களை பொருத்தமாக பேசி பிரபலமானவர் சீரியல் நடிகை வைஷ்ணவி ராஜசேகரன்.

இவர் டிக் டாக் மூலம் பிரபலமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை மூலம் அறிமுகமானார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வைஷ்ணவி .

இவருக்கு கடந்த செப்டம் பர் மாதம் தனது காதலர் சாய் விக்னேஷுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்