விஜே அர்ச்சனாவின் தாய் இறப்பதற்கு முன் எடுத்த வீடியோ... உருக்கமான பதிவு
90களில் சன் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக கலக்கி இப்போதும் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.
சன், விஜய், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ள அர்ச்சனா இப்போது ஜீ தமிழில் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதே தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை அவரது மகளும் தொகுத்து வழங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தொகுப்பாளினி அர்ச்சனா தனது தாயார் உயிரிழந்ததாக பதிவு செய்தார், அவருக்கு ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதா தனது இன்ஸ்டாவில் அம்மாவுடன் எடுத்த கடைசி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
A post shared by Anita Chandhoke (@anita_chandhoke)
மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் அம்மாவுடன் கடைசியாக வீடியோ எடுத்துள்ளனர், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாக அவர் கூறியதை வீடியோ பதிவு செய்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனால், இதுகுறித்துஅர்ச்சனாவின் தங்கை அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.