×

விரைவில் வருகிறாள் ‘செல்லம்மா’.. புதிய சீரியலின் ப்ரோமோ வெளியீடு !

 

‘செல்லம்மா’ என்ற புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் என்றாலே ரசிகர்களிடையே தனி மவுசுதான். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சமீபகாலமாக காதல், ரொமென்ஸ் காட்சிகளை காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் என பல சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றனர். 

அந்த வரிசையில் புத்தம் புதிய சீரியல் ஒன்று விரைவில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது. ‘செல்லம்மா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த சீரியலை ‘வேலைக்காரன்’ சீரியலை இயக்கி வரும் கதிரவன் இயக்கி வருகிறார். இந்த சீரியலின் ஹீரோவாக பிரபல விஜே ஹூசைன் அகமது கான் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ளார். 

இந்த சீரியலின் ஹீரோயினாக சாந்தினி நடிக்கிறார். இவர், +2, பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர ‘தாழம்பூ’, ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ‘செல்லம்மா’ சீரியலின் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.