×

 கிராமத்து மண் வாசனையில் ‘முத்தழகு’.. விரைவில் புத்தம் புதிய மெகா தொடர்

 

 கிராமத்து மண் வாசனையில் ‘முத்தழகு’ என்ற புத்தம் புது மெகா தொடர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.  

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருகிறது. மற்ற தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வந்தாலும் விஜய் டிவி சீரியல்களின் டி.ஆர்.பியை தொடமுடியவில்லை. ஏற்கனவே பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்கள் இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

இந்த சீரியல்களை தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறக்கி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கிராமத்து கதைக்களத்துடன், புத்தம் புதிய சீரியல் ஒன்றை ஒளிப்பரப்ப உள்ளது. பருத்தி வீரன் படத்தில் ‘முத்தழகு’ என்ற கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தார். ரசிகர்களிடையே பிரபலமான இந்த பெயரைதான் சீரியலுக்கு வைத்துள்ளனர். விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியலில் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. 

அதில், செம்மண் வாடையுடன் அழகிய கிராமம் ஒன்று காட்டப்படுகிறது. கடன் வாங்கி இருக்கும் கிராமத்து பெண்மணியான நாயகியின், காளை மாடுகளை கடன் கொடுத்தவர்கள் ஒட்டி செல்கின்றனர். காளைகள் இல்லாமல் கதாநாயகியே, காளை மாடுகளுக்கு பதில் ஏர் பூட்டி கொண்டு நிலத்தை உழுகிறார்.  இதை பார்க்கும் கதாநாயகனின் தாய், மண்ணை நேசிக்கும் முத்தழகின் விதியை மாற்ற, கண்ணை திறக்குமா சாமி என்ற மனதில் யோசித்துக்கொண்டே பார்க்கிறார். இத்துடன் முடிந்த ப்ரோமோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.