×

கண்ணனால் சிறைக்கு சென்ற கதிர்.. கடுங்கோபத்தில் மூர்த்தி !

 

கண்ணன் செய்த செயலால் கதிர் சிறைக்கு செல்வதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

விஜய் டிவியில் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரே வீட்டில் ஒன்றுமையாக வாழ்ந்து வரும் நான்கு அண்ணன் - தம்பிகள் மற்றும் அவர்களது மனைவி, குழந்தைகள் தான் இந்த சீரியல். ஒற்றுமையாக வாழ்ந்து வந்த அவர்களிடையே, ஜீவாவின் மச்சினிச்சி திருமணத்தில் மொய் வைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. 

இதனால் மொத்த குடும்பமும் தனித்தனியாக பிரிந்துவிட்டனர். முதலில் ஜீவா மற்றும் மீனா பிரிந்து சென்றனர். அதன்பிறகு சிறப்பாக வாழ்ந்து காட்டுவோம் என்று கூறிவிட்டு செல்லும் கண்ணன் - ஐஸ்வர்யா தம்பதி, கடனில் சிக்கி தவிக்கின்றனர். அளவிற்கு மீறி கடன் வாங்கிவிட்டு தற்போது பிரச்சனையில் சிக்குகின்றனர். 

தற்போதைய கதைப்படி கிரெடிட் கார்டில் தேவையில்லாமல் பொருட்களை வாங்கிவிட்டு கட்ட முடியாமல் கண்ணன் தவித்து வருகிறான். கடனை வசூலிக்க வங்கியிருந்து வந்த நபர் கண்ணனுடன் பிரச்சனை செய்ய அதை பார்த்த கதிர் தட்டி கேட்கிறார். இதனால் வங்கி ஊழியருக்கும் கதிருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் கதிர் சிறைக்கு செல்கிறார். இதை கேள்விப்பட்ட மூர்த்தி, கண்ணன் வீட்டிற்கு சென்று கண்டபடி திட்டி தீர்கிறார். இதனால் கண்ணன் - ஐஸ்வர்யா தனது தவறை உணர்ந்து கதறி அழுகின்றனர். இப்படி பரப்பரப்பு திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சென்றுக் கொண்டிருக்கிறது.