பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விஜய் சேதுபதியின் எபிசோடுகள் கூடுதல் விறுவிறுப்பை தருகின்றன என்று பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் கசிய, இது எதிர்பார்த்தது தான் என்று கமெண்டுகள் பதிவாகி வருகின்றன.
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நிகழ்வு நடைபெறும் நிலையில், இந்த வாரம் தர்ஷா, ஹன்சிகா, ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, சத்யா மற்றும் சௌந்தர்யா நாமினேஷனில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி, குறைந்த வாக்குகள் பெற்றதால் தர்ஷா வெளியேறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தர்ஷா மோசமாக விளையாடி வந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது வெளியேற்றம் எந்த ஆச்சரியமும் இல்லையென பார்வையாளர்களால் கூறப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரவீந்தர், அர்னவ் ஆகிய இருவரும் வெளியேறிய நிலையில் நாளை தர்ஷாவும் வெளியேறிய வெளியேறிவிட்டால் அதன் பின் தீபாவளி தினத்தில் சில வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்றும், அதன் பின் பிக் பாஸ் விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.