இந்த வாரம் எலிமினேஷன் யார்? போட்டியாளர்களின் கணிப்பு இதுதான்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இன்று நான்காவது நாளாக நடைபெறும் நிலையில், இன்றைய முதல் புரோமாவில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற கணிப்பை ஒவ்வொரு போட்டியாளரும் தெரிவிக்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் இந்த வாரம் வெளியேற்ற போவது கேர்ள்ஸ் டீமில் இருந்து ஒருவர் என விஜே விஷால் கூறுகிறார். ரவீந்தர் தான் போவார் என நினைக்கிறேன், 'அவர் கேமை ட்விஸ்ட் செய்வது போல எனக்கு தோன்றுகிறது' என்று தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து தீபக், 'ஜாக்குலினை கூறியதோடு, ஒன் மேன் ஷோவாக அவர் இந்த ஷோவை மாற்ற முயற்சிக்கிறார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். சௌந்தர்யா போவார் என்றும், 'அவர் சத்தமே இல்லாமல் இருக்கிறார்' என்றும் கூறினார். 'சௌந்தர்யா போவார்' என்று சத்யா, அக்ஷிதா ஆகிய இருவரும் கூற, ரஞ்சித் போவார் என சுனிதா, தர்ஷா ஆகியோர் கூறுகின்றனர்.
மொத்தத்தில் இந்த வாரம் செல்வது ரவீந்தர், ரஞ்சித், மற்றும் சௌந்தர்யா மூவரில் ஒருவர் எலிமினேஷன் ஆவார்கள் என்பதே ஒட்டுமொத்த போட்டியாளர்களின் கணிப்பாக உள்ளது