×

பத்த வச்சிட்டியே பரட்ட.. பவித்ராவை எல்லோர் முன்னிலையில் போட்டு கொடுத்த விஜய் சேதுபதி..!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, ஒருவரை பற்றி பேசும்போது பூசி மெழுகாமல், மறைமுகமாக கூறாமல் நேரடியாக முகத்துக்கு நேரில் அவருடைய தவறை கேள்வி கேட்கும் நிகழ்வு பார்வையாளர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழு சீசன்களாக ஒரு செயற்கையான பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் நாங்கள் பார்த்திருக்கிறோம் போல என்றும், இந்த சீசன் மிகவும் இயல்பாக உள்ளது என்றும் பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சற்றுமுன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் பவித்ராவை ஏதற்காக தேர்வு செய்தீர்கள் என்று தர்ஷிகாவிடம் விஜய் சேதுபதி கேட்க, அதற்கு தர்ஷிகா, "அவர் என் தோழி என்பதற்காக தேர்வு செய்யவில்லை, மெஜாரிட்டி ஓட்டு அவருக்கு வந்தது என்பதால் தான்" என்று கூறினார். ஒரு வாரம் கழித்து, "அது சரிதான் என நம்புகிறீர்களா?" என விஜய் சேதுபதி கேட்டபோது, "நாமினேஷன்னு தெரிந்தும் பவித்ரா சொல்லாமல் இருந்திருந்தால் அது கண்டிப்பாக தவறு தான், நானே கேட்டிருப்பேன்" என்று தர்ஷிகா கூறினார்.

இதனை அடுத்து, விஜய் சேதுபதி பவித்ராவிடம், "நீங்க அங்கே இருந்தீங்க தானே, பவி? பிராங்க் நாமினேஷன் ஆனது என்று சொன்னபோது, நீங்கள் ரைட் சைடு பெட்டில் இருந்தீங்க தானே?" என்று கேட்க, மாட்டிக்கொண்ட பவித்ரா வேறு வழியின்றி "ஆம்" என்று சொன்னார். அதன்பிறகு, தர்ஷிகாவிடம், "இப்போது சொல்லுங்க" என்று கேட்க, "நாமினேஷன் என்று தெரிந்தும் நான் அந்த பிராங்கை நீ செய்ய வைத்திருந்தேனா? அது கண்டிப்பாக தப்பு" என்று தர்ஷிகா கூறினார். இந்த புரமோ வீடியோ அதோடு முடிந்தது. இதையடுத்து பத்த வச்சுட்டியே பரட்ட இனி என்ன நடக்க போகுதோ என கமெண்டுகள் வருவது குறிப்பிடத்தக்கது.