×

அம்மாவான மகிழ்ச்சியில் நடிகை நக்ஷத்ரா.. குவியும் வாழ்த்துக்கள் !

 

 பிரபல சீரியல் நடிகையான நக்ஷத்ரா பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். 

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் நக்ஷத்ரா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘யாராடி நீ மோகினி’ சீரியல் மூலம் சீரியல் நடிகையாக கால்தடம் பதித்தார். வெண்ணிலா என்ற கேரக்டரில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

அந்த சீரியல் நிறைவுபெற்றதால் தற்போது ‘வள்ளி’ சீரியலில் நடித்து வருகிறார். அடாவடி கிராமத்து பெண்ணாக நடித்து வரும் அவரின் கேரக்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த அவர், ‘கிடாரி பூசாமி மகுடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர். 

இதற்கிடையே கடந்த ஆண்டு விஷ்வா சாம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார். டாட்டூ கலைஞரான அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக நக்ஷத்ரா அறிவித்திருந்தார். இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை நக்ஷத்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.