×

1000 எபிசோடுகளை கடந்து செம்பருத்தி சீரியல் சாதனை… ரசிகர்கள் வாழ்த்து!…

செம்பருத்தி சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’சீரியலுக்கு வயது ஆயிரம். இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்ற கம்பீரமான கேரக்டரில் பிரபல நடிகை பிரியா ராமன் இந்த சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நீண்ட நாட்களாக ஹீரோவாக நடித்து கார்த்திக் விலகி தற்போது நடிகர் அக்னி நடித்து வருகிறார். இந்த
 

செம்பருத்தி சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’சீரியலுக்கு வயது ஆயிரம். இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஆதிக்கடவூர்  அகிலாண்டேஸ்வரி என்ற கம்பீரமான கேரக்டரில் பிரபல நடிகை பிரியா ராமன் இந்த சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நீண்ட நாட்களாக ஹீரோவாக நடித்து கார்த்திக் விலகி தற்போது நடிகர் அக்னி நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் ஹீரோயினாக ஷாபானா நடித்து வருகிறார். இதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயினை இடையேயான காதல் காட்சியை வைத்துதான் இந்த சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை கடந்துள்ளது. இதையொட்டி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் குழுவினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தனது இன்டாகிராமம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சீரியலின் ஹீரோயின் ஷபானா, இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுத்த குழுவினருக்கு நன்றி.சீரியலில் நடிக்கும்போதும், தனிப்பட்ட முறையிலும் இந்த சீரியல் எனக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த நல்ல பயணத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.