×

அம்மாவாகும் ‘யூட்யூப்’ பிரபலம்… ரசிகர்கள் வாழ்த்து !

பிரபல யூட்யூப் பிரபலம் எருமசாணி ஹரிஜா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். யூட்யூப் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஹரிஜா. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், கோவை தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு எருமசாணி என்ற யூட்யூப் சேனல் நிகழ்ச்சியில் நடித்தார். இந்த யூடியூப் சேனலில் விஜய்யுடன் சேர்ந்து ஹரிஜா அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் “போடா எரும சாணி கிறுக்கு பயலே” என்று சொல்லும் டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக
 

பிரபல யூட்யூப் பிரபலம் எருமசாணி ஹரிஜா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யூட்யூப் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஹரிஜா. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், கோவை தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு எருமசாணி என்ற யூட்யூப் சேனல் நிகழ்ச்சியில் நடித்தார். இந்த யூடியூப் சேனலில் விஜய்யுடன் சேர்ந்து ஹரிஜா அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் “போடா எரும சாணி கிறுக்கு பயலே” என்று சொல்லும் டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவியது.

யூட்யூப்பில் அதிக பார்வையாளரை கொண்ட எருமசாணி சேனல் வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த சேனலின் மூலம் ஹரிஜாவுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சேனல் மூலம் சினிமாவிலும் தன் முகத்தை காட்ட ஆரம்பித்தார் ஹரிஜா. இதையடுத்து “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிஜா நடித்துள்ளார்.

இதனிடையெ தன்னுடன் குறும்படங்களில் நடித்த அமர் என்ற குறும்பட நடிகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை ஹரிஜா வெளிப்படுத்தியுள்ளார் . அதில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.