×

16 வயது குறைவானவருடன் திருமணமா? பிரபல நடிகை சுஷ்மிதா சென் விளக்கம்

27 வயது இளைஞரை நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார். மும்பை: 27 வயது இளைஞரை நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார். முதல் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்று, பாலிவுட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், நடிகை சுஷ்மிதா சென். 42 வயதான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண்களை தத்தெடுத்து
 

27 வயது இளைஞரை நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.

மும்பை: 27 வயது இளைஞரை நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.

முதல் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்று, பாலிவுட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், நடிகை சுஷ்மிதா சென். 42 வயதான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ஆனால், ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண்களை தத்தெடுத்து தன்னுடனே வளர்த்து வருகிறார். இந்நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரோமன் ஷால்(வயது 27) என்ற இளம் மாடலுடன் சுஷ்மிதா சென்னுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

16 வயது குறைவானவரை சுஷ்மா திருமணம் செய்து கொள்கிறாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.