×

180 தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட் : ஆரத்தி எடுத்து நன்றி தெரிவித்த மக்கள்!

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் வெளிமாநிலத்தில் இருந்து தங்கி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக ‘அருந்ததி’ ‘ஒஸ்தி’, ‘தேவி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சோனு சூட். இவர் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் மகாராஷ்ட்ராவின் சயான் கோலிவாடா பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை
 

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் வெளிமாநிலத்தில் இருந்து தங்கி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக ‘அருந்ததி’ ‘ஒஸ்தி’, ‘தேவி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சோனு சூட். இவர் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 

இந்நிலையில் மகாராஷ்ட்ராவின் சயான் கோலிவாடா பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பேருந்து மூலம் 180 தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். இதனால் முதற்கட்டமாக பேருந்தானது  வடலா டிடி பகுதியில் இருந்து நேற்று புறப்பட்டது.அப்போது நடிகர் சோனு சூட்டுக்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து தங்கள் நன்றியினை தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய சோனு சூட், “நானும் ஒரு புலம்பெயர் தொழிலாளர் தான். நானும் மும்பைக்கு பெரிய கனவோடு வந்தவன். பசியால் வாடுபவர்களை பார்க்கும் போது நான் தான் நினைவுக்கு வருகிறேன். நானும் மும்பைக்கு வரும் போது ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து, கழிவறை அருகில் தூங்கி கொண்டு தான் வந்தேன். அதன் வலி என்ன என்பது எனக்கு தெரியும்” என்றார்.