×

"9 மணிக்கு 9 நிமிடங்கள்" : சர்ச்சை இயக்குநரின் சர்ச்சை வீடியோ!

கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி “இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார். அதன் படி நேற்று நாடு முழுவதும் தீபம் ஏற்றபட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என
 

கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி “இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார். அதன் படி நேற்று நாடு முழுவதும் தீபம் ஏற்றபட்டது.  முக்கிய அரசியல் தலைவர்கள்,  பிரபலங்கள் என பலரும் இதை செய்தனர். 

இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர்போன பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான  ராம் கோபால் வர்மா, நேற்று 9 மணிக்கு  வீடியோ ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில்  இருட்டில் சிகரெட்டை பற்ற வைக்க்கும் படியாக அந்த வீடியோ உள்ளது. இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. 

[video:https://www.instagram.com/p/B-mwdRPFZxB/?utm_source=ig_web_copy_link]

முன்னதாக கடந்த 1 ஆம் தேதி தனக்கு கொரோனா என்று பதிவிட்ட அவர், பின்னர் முட்டாள்கள் தினம் என்பதால் ஏமாற்றினேன் என்று கூறி கடுப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.