×

ரஜினியிடம் நிச்சயம் ஆதரவு கேட்பேன் – அரசியல் குறித்து கமல்ஹாசன்!

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவு தெரிவிப்பதாகவும் கூறி இருந்தார்.அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது செய்தியாளர்கள் நடிகர் ரஜினி குறித்தும் கேள்வி எழுப்பினர். ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நீங்கள் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா? என்ற
 

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவு தெரிவிப்பதாகவும் கூறி இருந்தார்.அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது செய்தியாளர்கள் நடிகர் ரஜினி குறித்தும் கேள்வி எழுப்பினர்.


ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நீங்கள் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது ,அதற்கு சாதுரியமாக பதிலளித்த நடிகர் கமல், ’எல்லோரிடமும் நான் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா? கண்டிப்பாக ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்’ என கூறினார். மேலும் ‘ரஜினிக்கு அரசியலை விட அவரது உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என்றும், அவர் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்’ என்றும் கமல் தெரிவித்தார். கமலுடைய இந்த பதில் அவரது ரசிகரிடையே மிகுந்த பரவசத்தையும் , ரஜினி கமல் இடையே உள்ள அழகிய நட்பையும் வெளிப்படுத்தியுள்ளது.