×

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ‘தலைவி’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழுவின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சினிமா முதல் அரசியல் வரை தன் வாழ்க்கையில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. நடிகையாக இருந்து தமிழகத்தின் முதல்வராக மாறி இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா. இன்று அவரது பிறந்தநாள் தமிழகம் முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும்
 

இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழுவின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சினிமா முதல் அரசியல் வரை தன் வாழ்க்கையில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. நடிகையாக இருந்து தமிழகத்தின் முதல்வராக மாறி இரும்புப் பெண்மணி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா. இன்று அவரது பிறந்தநாள் தமிழகம் முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் தலைவி படத்திலிருந்து முக்கிய அறிவிப்பு இன்று மாலை 06.35 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பூர்ணா சசிகலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.