×

”என் அப்பா இதுவரை என்னிடம் கத்தியது இல்லை… அவர் அப்படிப்பட்டவர் இல்லை..”- ஸ்ருதி ஹாசன்

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே சமூக வலைதளங்கள் வாயிலாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். சிலர் இன்ஸ்டகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ஸ்ருதிஹாசனிடம் ரசிகர் ஒருவர், உங்கள் தந்தை கமல்ஹாசனிடமிருந்து நீங்கள் பெற்ற மோசமான தண்டனை எது என கேள்விகேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், தன்னுடைய அப்பா இதுவரை தன்னிடம் கத்தியதில்லை எனவும், தண்டனையும் அளித்ததில்லை
 

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே சமூக வலைதளங்கள் வாயிலாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து  வருகின்றனர். சிலர் இன்ஸ்டகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது ஸ்ருதிஹாசனிடம் ரசிகர் ஒருவர், உங்கள் தந்தை கமல்ஹாசனிடமிருந்து நீங்கள் பெற்ற மோசமான தண்டனை எது என கேள்விகேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், தன்னுடைய அப்பா இதுவரை தன்னிடம் கத்தியதில்லை எனவும், தண்டனையும் அளித்ததில்லை எனவும் கூறினார். மேலும் அவர் அப்படிபட்டவரும் கிடையாது.” ஒருமுறை நான் தவறு செய்தேன்…  அதற்கு அப்பா, நான் மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டேன் என்று கூறியதாக தெரிவித்தார்.”

  அதேபோல் மற்றொரு ரசிகர் ஒருவர் கமல்ஹாசனின் உடல்நலம் குறித்து கேட்டிருந்தார். அதற்கு, “அப்பா தற்போது சென்னையில் நலமாக உள்ளார்.  பாதுகாப்புக்காக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், “ஊரடங்கு முடிந்தபிறகு முதலில் படப்பிடிப்புக்கு செல்வேன்.. படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றுவது மிகவும் மிஸ் செய்கிறேன்.. ஆனால் பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே செல்வேன் என்று கூறியுள்ளார் ..