×

தன் வசனங்களின் மூலம் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த கதாசிரியர் பாலமுருகன் பிறந்தநாள்…

பாடல்கள், நடிகர் நடிகைகளுக்காக படங்கள் ஓடிய காலம் வரும்முன் வசனங்களுக்காக திரைப்படங்கள் ஓடிய காலம் உண்டு.. அவ்வாறு தனது வசனங்களின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த வசனகர்த்தா பாலமுருகன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.. வசனங்களின் மூலம் வெற்றிப்படங்களை கொடுத்து நீங்கா புகழ் பெற்றவர்கள் சிலரே.. அவர்களில் இளங்கோவன், பேரறிஞர் அண்ணா, ஏ.எஸ்.ஏ. சாமி.. கலைஞர் கருணாநிதி, ஏ.பி. நாகராஜன், ஜாவர் சீதாராமன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக் காலக்கட்டங்களில் வசனங்களுக்காகவே தமிழ்ப் படங்கள் பேசப்பட்டன. ஏன் ‘பராசக்தி’ படத்தில்
 

பாடல்கள், நடிகர் நடிகைகளுக்காக படங்கள் ஓடிய காலம் வரும்முன் வசனங்களுக்காக திரைப்படங்கள் ஓடிய காலம் உண்டு.. அவ்வாறு தனது வசனங்களின் மூலம்  பல  வெற்றிப்படங்களை கொடுத்த வசனகர்த்தா பாலமுருகன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.. 


வசனங்களின் மூலம் வெற்றிப்படங்களை கொடுத்து நீங்கா புகழ் பெற்றவர்கள் சிலரே.. அவர்களில் இளங்கோவன், பேரறிஞர் அண்ணா, ஏ.எஸ்.ஏ. சாமி.. கலைஞர் கருணாநிதி, ஏ.பி. நாகராஜன், ஜாவர் சீதாராமன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்தக் காலக்கட்டங்களில் வசனங்களுக்காகவே தமிழ்ப் படங்கள் பேசப்பட்டன. ஏன் ‘பராசக்தி’ படத்தில் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான வசனங்கள் இன்றளவிலும் பேசப்படுகின்றன. அவ்வாறு வசனத்தின் மூலம் தனி இடம் பதித்தவர்களின் வரிசையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த கதாசிரியர் பாலமுருகனும் ஒருவர்.  நடிகர் திலகம் சிவாஜியின் மீது அதீத பற்று கொண்டவர் பால முருகன்.


இவர் எழுதிய நாடகங்களில் சிவாஜி நடித்திருக்கிறார். ஆனாலும் சிவாஜியின் படங்களுக்கு வசனம் எழுத வேண்டும் என்பது அவருக்கு தீராத ஆசையாக இருந்துள்ளது. அந்த ஆசை 1965 ஆம் ஆண்டு வெளியான ‘அன்புக்கரங்கள்’ திரைப்படம் மூலம் நிறைவேறியது. அண்ணன் தங்கைக்கு இடையேயான பாசத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் தனது அழுத்தமான வசனங்கள் மூலம் தனி முத்திரை பதித்திருப்பார்.


இவரது வசனங்களில் சமுதாயத்திற்குத் தேவைப்படும் பெரும் அர்த்தம் பொதிந்த கருத்துக்கள் அதிகம் இடம்பெறும். இந்தப் படத்தில் சிவாஜிக்கு தங்கையாக ஆனந்தி கதாப்பாத்திரத்தில் மணிமாலா நடித்திருப்பார். சிவாஜியை காதலிக்கும் பெண்ணாக அன்னம் கதாப்பாத்திரத்தில் தேவிகா நடித்திருப்பார். ’பொன்னகரம்’ என்னும் ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராக இருக்கும் சிவாஜி, வேலை நேரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் நாகேஷிடம் “நிமிர்ந்து நில்” என்று கூறுவார். மேலும் “கடமையிலிருந்து தவறிய யாராலும், சரியாக நிமிர்ந்து நிற்க முடியாது என்று சொல்லுவார்.  

பிறகு தங்கையின் திருமண பேச்சு வரும்போது, “கடல்ல இருக்கிற முத்து இடம் மாறினாதானே கடலுக்கும் பெருமை, முத்துக்கும் பெருமை”, மற்றும் திருவிழாவிற்குச் சென்று தனியாக வீடு வரும் தங்கையிடம், “அம்மா  ஒரு குடும்பம் பெருமையடையறதும், சிறுமையடையறதும் வீட்டுப் பெண்கள் கைலதான் இருக்கு” என்ற வசனம் என படம் முழுக்க தனது வசனங்களின் மூலம் வாழ்க்கைகு பல அறிவுறைகளைச் சொல்லியிருப்பார் பாலமுருகன்.


இந்தக் கதையைக் கேட்ட இயக்குநர்,  இக்கதைக்கு ஜாவர் சீதாராமன் வசனம் எழுதட்டுமே என்றிருக்கிறார். ஆனால் கதை-வசனம் இரண்டையும் பாலமுருகன் எழுதட்டும் என்று நடிகர் திலகம் சொல்லியிருக்கிறார். இதனை அன்புக்கரங்கள் படத்தின் தயாரிப்பாளர் பெரியண்ணா  தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு பிறகு சிவாஜியின் ’பட்டிக்காடா பட்டணமா’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’, வசந்த மாளிகை’ என சிவாஜியின் பல படங்களுக்கு பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார்.

மேலும் தனது 40 ஆண்டுகால சினிமா பயணத்தை, ”நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்” என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். பல சாதனைகளை படைத்து, இன்று தனது பிறந்தநாள் கொண்டாடும் பாலமுருகன் அவர்களுக்கு டாப் தமிழ் நியூஸ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..