×

தமிழில் வெளியாகிறது புருவ அழகியின் திரைப்படம்!

புருவ அழகி பிரியா வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்படவுள்ளது சென்னை: புருவ அழகி பிரியா வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்படவுள்ளது. மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் வரும் ‘மாணிக்க மலராய பூவி’ பாடலில் தனது புருவ அசைவுகளால் சமூக வலைத்தளத்தில் ஒரே நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவரது புருவ அசைவுகள் பாலிவுட் வரை பிரபலமானதையடுத்து,
 

புருவ அழகி பிரியா வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்படவுள்ளது

சென்னை: புருவ அழகி பிரியா வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் திரைப்படம் தமிழில் டப் செய்யப்படவுள்ளது.

மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் வரும் ‘மாணிக்க மலராய பூவி’ பாடலில் தனது புருவ அசைவுகளால் சமூக வலைத்தளத்தில் ஒரே நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவரது புருவ அசைவுகள் பாலிவுட் வரை பிரபலமானதையடுத்து, தேசிய அளவில் பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியான இந்த ஒரே ஒரு டீசரால் இந்தியாவின் உள்ள பல முன்னணி நடிகைகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு பல நாட்களாக  முதலிடத்தையே பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி ‘ஒரு ஆதார் லவ்’ படத்தை பல மொழிகளில் ரீமேக் மட்டும்  டப் செய்யவும் போட்டி ஏற்பட்டது.

இந்நிலையில், ஒரு அடார் லவ் தமிழிலும் தற்போது டப் செய்யப்பட்டுள்ளது இதை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது அதில் பிரியாவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.