×

தேரை இழுத்து தெருவில் விட்ட அஜித் ரசிகர்கள்.!? அலறும் சோசியல் மீடியா.!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய். இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்ட போதிலும், அவரது ரசிகர்கள் அதைக் கேட்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பாகவே கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள், காமன் டிபி, ஹேஷ்டேக், மாஷ் அப் பாடல்கள் எல்லாம் வெளியிட்டு
 

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய்.  இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்ட போதிலும், அவரது ரசிகர்கள் அதைக் கேட்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பாகவே கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள், காமன் டிபி, ஹேஷ்டேக், மாஷ் அப் பாடல்கள் எல்லாம் வெளியிட்டு அசத்தினர். நேற்று இரவு முதலே #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர்  ட்ரெண்டிங்கில் முதலிடம் வைத்திருந்தனர். மேலும், #MasterTrailer, #HBDTHALAPATHYVijay, #Vijay anna போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இந்நிலையில் இதனைப் பார்த்து களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள் #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். அதனை 1 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட் செய்து, #HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ்டேக்கை பின்னுக்குத்தள்ளி  ட்ரெண்டிங்கில் முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி அன்றும், இதே போன்ற ட்விட்டர் சண்டை நிகழ்ந்தது. தலைக்கு பர்த்டே சர்ப்ரைஸ் குடுக்கனும்னு நினைச்சி அஜித் ரசிகர்கள் உருவாக்கிய  #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை பின்னுக்குத்தள்ளி #VijayTheFaceOfKollywood என்ற தளபதி ரசிகர்களின் ஹேஷ்டேக் ட்விட்டரில் முதலிடத்தில் இருந்தது.  தல ரசிகர்களை கடுப்பேத்த விஜய் ரசிகர்கள் கையிலெடுத்த அதே ஆயுதத்தை, இன்று அஜித் ரசிகர்கள் கையிலெடுத்து விஜய் ரசிகர்களை சீண்டியிருக்கின்றனர்.  இதனால் மறுபடியும் தல-தளபதி ரசிகர்களுக்கு இடையேயான மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.