×

"நானும் ரெடி; விஜய்யும் ரெடி" : தளபதி65 உண்மையை உடைத்த இயக்குநர் ஷங்கர்?!

இயக்குநர்கள் ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லீ இவர்களுள் ஒருவர் இப்படத்தை இயக்க போவதாகவும் செய்திகள் வெளியாகின. தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து சமீபத்தில் தளபதி 65 என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலானது. அதில் விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகவும், இயக்குநர்கள் ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லீ
 

இயக்குநர்கள் ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லீ இவர்களுள் ஒருவர் இப்படத்தை இயக்க போவதாகவும் செய்திகள் வெளியாகின.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

இதையடுத்து சமீபத்தில்  தளபதி 65 என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலானது. அதில்  விஜய்யின்  அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகவும்,  இயக்குநர்கள்  ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லீ இவர்களுள்  ஒருவர் இப்படத்தை இயக்க போவதாகவும் செய்திகள் வெளியாகின. 

 

இந்நிலையில் சமீபத்தில் விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்  ஷங்கரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நானும் ரெடி விஜய்யும் ரெடி, எப்போ வேண்டுமானாலும் நடக்கும்” என்று கூறினார். இதன் மூலம் விஜய்யின்  அடுத்த படம் ஷங்கர் உடன் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக  விஜய் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.