×

பல மொழிகளில் ரீமேக் ஆகும் 'தடம்'… ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல ஹீரோ!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்த படம் தடம். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மகிழ் திருமேனி ஏற்கனவே ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் ஒரே உருவம் கொண்ட இரட்டையர்களாக அருண் விஜய் நடித்திருந்தார். இரட்டையரில் கொலை செய்தது யார் என தெரியாமல் இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள். இந்த கதை தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது தெலுங்கில் இப்படம் ரீமேக் ஆகிவருகிறது.
 

மகிழ் திருமேனி  இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை  வேடங்களில் நடித்திருந்த படம் தடம். இந்த  படம் மாபெரும் வெற்றி பெற்றது. மகிழ் திருமேனி ஏற்கனவே ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் ஒரே உருவம் கொண்ட இரட்டையர்களாக  அருண் விஜய் நடித்திருந்தார். இரட்டையரில் கொலை செய்தது  யார் என தெரியாமல்  இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள். இந்த கதை தமிழ்  ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

தற்போது  தெலுங்கில் இப்படம் ரீமேக்  ஆகிவருகிறது. ‘ரெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார். கிஷோர் திருமலா இப்படத்தை இயக்கிவருகிறார். இதில் நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தெலுங்கை  அடுத்து ‘தடம்’ ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். ‘தடம்’ படத்தில் பெண் காவலராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் வித்யா பிரதீப். மிருனல் தாக்கூர் இந்தியில் அவரது  கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.