×

ராணா மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறதா?

ராணா தெலுங்கில் பல படங்கள் நடித்திருந்தும் பாஹுபலி தான் அவரை இந்தியாவின் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அறிமுகப்டுத்தியது. தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சினிமா வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. காடன் படத்தில் மிகவும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா இந்த படத்திற்காக வருடக்கணக்கில் செல்வழித்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரியா என பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின்
 

ராணா தெலுங்கில் பல படங்கள் நடித்திருந்தும் பாஹுபலி தான் அவரை இந்தியாவின் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அறிமுகப்டுத்தியது. தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். பிரபு  சாலமன் இயக்கத்தில் காடன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சினிமா வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. 

காடன் படத்தில் மிகவும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா இந்த படத்திற்காக வருடக்கணக்கில் செல்வழித்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரியா என பல  நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருந்தது. படம் ரிலீஸ் ஆவது லாக்டவுனால் சற்று தள்ளி போடப்பட்டிருக்கிறது. 

காடன் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக தகவல்கள் பரவி வந்தன. இதுகுறித்து பேசிய  ராணா காடன் படம் முதலில் திரையங்குகளில் தான் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் படம் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரில் வெளியிடப்பட இருக்கிறது. ஊரடங்கிற்குப் பின் படம் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ராணா.