×

லாக்டவுனுக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இயக்க தயாராகும் நடிகர் தனுஷ்…

தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், அவரது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் சினிமாவுக்குள் அறிமுகமானார். கடின உழைப்பால் உச்சம் தொட்ட தனுஷ் அடுத்து ’ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்காக காத்திருக்கிறார். நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம்
 

தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர்,  இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், அவரது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் சினிமாவுக்குள் அறிமுகமானார்.  கடின உழைப்பால் உச்சம் தொட்ட தனுஷ் அடுத்து ’ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்காக காத்திருக்கிறார். 
 
நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டிய ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை இயக்கி, அதில் நடித்தும் வந்தார் தனுஷ்.
 
’நான் ருத்ரன்’ என பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர்.அதன்பின்  பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அசுரன், பட்டாஸ், ஜகமே தந்திரம் என அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருந்ததால் இந்தப்படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது லாக்டவுன் சமயத்தில் தனுஷ் அப்படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சரித்திரப் படத்தை இந்த சூழலில் படமாக்குவது சாத்தியம் தானா என மற்றொரு கேள்வியும் எழுகிறது. அதோசு, கார்த்திக் நரேனுடன் டி43, அக்‌ஷய் குமாருடனான பாலிவுட் படம் ஒன்று என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷ் இந்தப்படத்தை எப்போது இயக்குவார் எனவும் தெரியவில்லை. இந்நிலையில் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.