×

’தென்பாண்டி சீமையிலே’ அப்பாவின் பாடலை அழகாக பாடிய ஸ்ருதி ஹாசன்…

இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 11,439 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,189 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க புத்தகங்கள் வாசிப்பது, சமைப்பது, வீட்டு வேலை செய்வது, நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். மேலும் ரசிகர்களுடன்
 

இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 11,439 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,189 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க புத்தகங்கள் வாசிப்பது, சமைப்பது, வீட்டு வேலை செய்வது, நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். மேலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக இருக்க தாங்கள் அன்றாடம் செய்யும் பணிகளையும், கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அந்தவகையில் நடிகை ஸ்ருதி ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் அப்பா கமல் ஹாசன் நடித்த ’நாயகன்’ படத்தில் இடம்பெறுள்ள “தென்பாண்டி சீமையிலே” என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். பாடலை அழகாக பாடியுள்ள ஸ்ருதியின் திறமையை கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @shrutzhaasan on Apr 14, 2020 at 9:41am PDT