×

3 நிமிட ஆக்ஷன் காட்சி, ஒரே ஷாட்… அதர்வா செய்த தரமான சம்பவம்!

அதர்வா நடித்து வரும் புதிய படத்தில் மூன்று நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து முடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். 100 திரைப்படம் போலவே இந்தப் புதிய படமும் போலீஸ் த்ரில்லர் கதையாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தினை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த
 

அதர்வா நடித்து வரும் புதிய படத்தில் மூன்று நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து முடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர்.

100 திரைப்படம் போலவே இந்தப் புதிய படமும் போலீஸ் த்ரில்லர் கதையாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தினை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடந்துள்ளது. நேற்று அவர்கள் ஒரு ஆக்ஷன் காட்சியைப் படமாக்கியுள்ளனர். மூன்று நிமிடம் வரும் அந்தக் காட்சியை அதர்வா ஒரே ஷாட்டில் நடித்து முடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நான்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக இருக்கும். இந்தக் காட்சி படத்தில் சுமார் 2.50 நிமிடங்கள் வரை வரும். ஒரே ஷாட்டில் காட்சிகளைப் படமாக்குவது கடினம். அதுவும் ஆக்ஷன் காட்சிகளை ஒரே ஷாட்டில் எடுப்பது மிகக் கடினம்.

ஆக்ஷன் காட்சியில் அடுத்து என்ன நடக்கும், கேமரா எங்கு இருக்கும், அவர்கள் எவ்வாறு பாதையை பின்பற்ற வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிய வைக்க நாங்கள் அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தத்து. அதர்வா இதுபோன்ற ஒரு காட்சியைச் செய்வது இதுவே முதல் முறையாகும். அதற்காக அவர் இரண்டு நாட்கள் ஒத்திகை செய்தார்.” என்று ஸ்ருதி நல்லப்பா தெரிவித்துள்ளார்.

“இந்த குறிப்பிட்ட காட்சிக்காக மட்டும் நாங்கள் நான்கு நாட்கள் தயார்படுத்தினோம். எல்லாவற்றையும் முன்னரே திட்டமிட்டு செய்துள்ளதால் தவறு நடக்க வாய்ப்பில்லை” என்று இயக்குனர் சாம் ஆண்டன் தெரிவித்துள்ளார்.