×

பாலின சோதனையால் பதக்கம் பறிக்கப்பட்ட தடகள வீரரின் வாழ்க்கை படமாகிறது!

அறிமுக இயக்குனர் ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்மணி சாந்தி சௌந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு தோஹா விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீரர் சாந்தி சௌந்தர்ராஜன் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் பாலின பரிசோதனையில் தோல்வியடைந்ததால் அவர் பதக்கம் பறிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “ஒரு தடகள வீரர் தான் பங்கேற்கும் போட்டிகளில் அந்த சில நொடிகள் ஓடுவதற்காக தங்கள் வாழ்நாளில் குறைந்தது
 

அறிமுக இயக்குனர் ஒருவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்மணி சாந்தி சௌந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு தோஹா விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீரர் சாந்தி சௌந்தர்ராஜன் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் பாலின பரிசோதனையில் தோல்வியடைந்ததால் அவர் பதக்கம் பறிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“ஒரு தடகள வீரர் தான் பங்கேற்கும் போட்டிகளில் அந்த சில நொடிகள் ஓடுவதற்காக தங்கள் வாழ்நாளில் குறைந்தது 10 வருடங்களாவது செலவிடுகின்றனர்.

விளையாட்டு வீரர்கள் பதக்கம் வென்ற பின்னர் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும். மாறாக, சாந்தி சௌந்தர்ராஜனுக்கு வாழ்க்கை தலைகீழாக மாறியது. ஒரு நபரின் வெற்றி தலைகீழாக மாறி அவர் வாழ்கையைப் போராட்டமாக மாறிய கொடூரமான முரண் தான் சாந்தி குறித்த வாழ்க்கை வரலாற்றை ஆராய என்னைத் தூண்டியது” என்று தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டிகளில் போட்டியிட்ட படத்தின் இயக்குனர் ஜெயசீலன் கூறுகிறார். சாந்தி சௌந்தர்ராஜனின் அனுமதியுடன் தான் இந்தப் படத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

“நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த படத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன், சாந்தி தனது முழு வாழ்க்கைக் கதையையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த படம் அவரது வாழ்க்கையில் மூன்று கால கட்டங்களைக் கையாளும்

சாந்திக்கு ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் என்ற பாதிப்பு இருந்ததால் அவருடைய டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருந்தது. ஆனால் அவருடைய இந்தப் பிரச்னை இயற்கையானது. ஊக்கமருந்து எடுத்துக்கொண்டு உருவாகும் பாதிப்பு அல்ல. இந்த விவகாரம் தற்போது நடந்திருந்தால் அவர் மீதான தடை முற்றிலும் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். உசேன் போல்ட் பெரிய நுரையீரல் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் வேகமாக இயங்க முடிகிறது. அது ஏற்றுக்கொள்ளப்படும் பொழுது சாந்திக்கு மட்டும் ஏன் பாகுபாடு!? அவருடைய பெண்மையைப் பற்றி கேள்வி எழுப்பப்படுவது அனைத்து பெண்களையும் அவமதிப்பதற்குச் சமம். சமுதாயத்தின் இத்தகைய அணுகுமுறைகள் அவர்களை மனச்சோர்வுக்குள்ளாக்குகிறது, இதுதான் சாந்தியின் விஷயத்தில் நடந்தது” என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டி மற்றும் இசையமைப்பாளர் கிப்ரான் ஆகியோரை ஜெயசீலன் இந்தப் படத்தில் இணைத்துள்ளார்.