×

அஜய் ஞானமுத்து- விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தின் டப்பிங் வேலைகள் துவக்கம்!

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. அதையடுத்து விஜயதசமி திருநாளான இன்று கோப்ரா படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த மங்களத் திருநாளில் கோப்ரா படத்தின் டப்பிங் பணிகளைத் துவங்குகிறோம்.” என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், பத்மபிரியா, பாபு ஆண்டனி, மாமு கோயா, ரோபோ சங்கர்,
 

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. அதையடுத்து விஜயதசமி திருநாளான இன்று கோப்ரா படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மங்களத் திருநாளில் கோப்ரா படத்தின் டப்பிங் பணிகளைத் துவங்குகிறோம்.” என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், பத்மபிரியா, பாபு ஆண்டனி, மாமு கோயா, ரோபோ சங்கர், கனிகா மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். விக்ரம் இந்தப் படத்தில் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.