சைபர் கிரைமை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் " பற்ற வைத்த நெருப்பொன்று " திரைப்படம்…

சைபர் கிரைமை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் " பற்ற வைத்த நெருப்பொன்று " திரைப்படம்…

புதுமுக இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் தினேஷ் சதாசிவம் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ” பற்ற வைத்த நெருப்பொன்று “. இருவர் பிலிம் பேக்டரி என்ற  புதிய பட  நிறுவனம் சார்பில் இந்தப்படத்தை வினோத் ராஜேந்திரன் மற்றும் தினேஷ் சதாசிவர் ஆகிய இருவருமே இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ‘தடம்’ திரைப்படத்தில் நடித்த ஸ்மிருதி மற்றும் புதுமுகங்கள் அபிலாஷ், மாரிஸ், ஹரி, ரஞ்சித், திரு ஆகியோரும்  நடித்துள்ளனர்.

சைபர் கிரைமை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் " பற்ற வைத்த நெருப்பொன்று " திரைப்படம்…

நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஏற்படும்,   நூதன சைபர் திருட்டு,  டெலிவரி நெட்வொர்க் மூலம் நடக்கும் தீமைகள், சமூக விரோத செயல்கள் என பல தற்கால சமூக பிரச்சனைகளைப்  ஆணித்தரமாக இந்த படத்தின் மூலம் விளக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன். மேலும் இந்தப் படத்தில் சூர்ய பிரசாத்தின் இசையில் இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள்  அமைந்துள்ளன.  இந்த படத்திற்கு  சுரேஷ் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் துவாரகநாத் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.

சைபர் கிரைமை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் " பற்ற வைத்த நெருப்பொன்று " திரைப்படம்…

நடிகர், நடிகைகள், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் புதுமுகங்களாக அறிமுகமாகியிருக்கும் இந்தப் படம், ஈசிஆர், பழவேற்காடு மற்றும் சென்னையை சுற்றியுள்ள இடங்களிலேயே சுமார் 70 நாட்கள்  படமாக்கப்பட்டுள்ளன. விரைவில் திரைக்கு வர இருக்கும்  இந்தப்படத்தின் டீஸரை நேற்று மக்கள் செல்வன் விஜய் சேதுபது வெளியிட்டார்.

சைபர் கிரைமை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் " பற்ற வைத்த நெருப்பொன்று " திரைப்படம்…

மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மெனன், நடிகர்கள் விஷ்ணு விஷால்ம் விக்ராந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.  ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி நசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story