கொரோனாவை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை..- இயக்குனர் அமீர்

கொரோனாவை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை..- இயக்குனர் அமீர்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் இந்தியாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் இருசக்கர வாகனங்களில் வெளியில் செல்வதை தொடர்ந்து வருகின்றனர். இதனை பல பிரபலங்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் , இயக்குனர் அமீர் கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். 

கொரோனாவை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை..- இயக்குனர் அமீர்

அதில், “ வணக்கம்.. கொரோனா..! உலகையே அச்சுறுத்திய அதிபயங்கரமான சொல்.  இந்த கொரோனா இப்பொழுது இந்தியாவையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிவேகமாக பரவி இருக்கக் கூடிய சூழ்நிலை பார்க்கிறோம்.. இதற்கு முன்னால் எத்தனையோ தொற்றுநோய்கள் வந்திருந்தாலும் கூட இந்த நோயின் வீரியம் அதிவேகமாக பரவுகிற காரணத்தினால் இன்றைக்கு நாடே முடங்கி கிடக்கக் கூடிய சூழலை பார்க்கிறோம்.. அதிலும் தமிழகம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. இது ஒரு புதிய அனுபவமாக எல்லோருக்கும் இருக்கும். அனைத்து மக்களுக்கும் கிட்டத்தட்ட 21 நாட்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால் இந்த சூழலில் தேவைதானா என்று  பார்த்தால், நிச்சயமாக தேவையான ஒன்றுதான்,அதனை புரிந்து கொள்ள வேண்டும். 

கொரோனாவை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை..- இயக்குனர் அமீர்

இந்த நோய்க்கு பயந்து நாம ஓடி ஒளியும் அப்படின்னு அர்த்தம் இல்ல.  நம்ம ஊரில் சொல்வார்கள் துஷ்டனைக் கண்டால் தூர விலகிப் போகனும் என்று, அது மாதிரி இந்த கொரோனா எனும் துஷ்டனைக் கண்டு தூர விலகிப் போவதாதான் இதை எடுத்துக்கொள்ளனும்.  தனிமைல எப்படி இருக்கிறது வீட்டுக்குள்ளேயே எப்படி இருக்கிறது என்ற கேள்வி எல்லாருடைய உள்ளத்திலும் இருக்கும். இது நம்மை பாதுகாப்பதற்கு மட்டும் கிடையாது ,உறவுகளை பாதுகாப்பதற்கு மட்டும் கிடையாது நம் சமூகத்தைப் பாதுகாப்பதற்குத்தான்.  நாம் தனித்து இருக்கனும்ங்கிறது  நமக்கானது மட்டுமல்ல,  மற்றவர்கள் மீதுள்ள அக்கறையின் காரணமாக கூடதான்..  இந்த நோய் பற்றி இன்னும் புரிதல் இல்லாமல் பலர் இருக்கிறதை நம்மால் பார்க்க முடிகிறது.. செய்தி சேனல்களை பார்க்கும் பொழுது இன்னும் அச்சமில்லாமல் பலர் வந்து வாகனங்களில் வெளியில் கிளம்பி போறது, இரண்டு சக்கர வாகனங்கள் கிளம்பி போகக்கூடிய சூழ்நிலை பார்க்கிறோம். 

இத்தாலியிலும், தென் கொரியாவிலும்  ஆயிரக்கணக்கான பேர்களுக்கு வைரஸ் பரவியதற்கான  காரணம் ஒற்றை மனிதனாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஒருவரிடமிருந்துதான் அவ்வளவு போய் இருக்கு. அதுனால ஒருத்தருக்கு வந்து, ஒரு ஆள் இத்தனை பேருக்கும்  கொண்டு போய் சேர்க்க முடியுமா அப்படின்னா இந்த நோயின் தன்மையை அது தான்.  அதனால தனியா இருக்கப்ப வீட்டிலேயே இருக்க பழகுங்கள் உறவினர்களும் நண்பர்களும் எல்லோரிடத்திலும் அலைபேசியில் பேசிக் கொள்ளலாம். யாரும் வீட்டுக்கு வர வேண்டியதில்லை..ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வேண்டியதில்லை.. கை கொடுக்க வேண்டியதில்லை .. அரசு சொன்ன எச்சரிக்கை உணர்வோடு பாதுகாப்போடு இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்..

நான் ஒரு ஆள்  வெளியில் போறதுனால என்ன பாதிப்பு வரும், எனக்கு என்ன பாதிப்பு வரும்னு நினைக்காதீங்க.. இந்த நோய் மூன்றாவது கட்டத்தை இந்த தேசத்தில் சந்திச்சிக்கிட்டு இருக்கு..  அடுத்த கட்டத்திற்குப் போகும் போது , நாம பாதுகாப்பு உணர்வோடு இருந்தா, எச்சரிக்கை உணர்வோடு இருந்தா இது அதிகம் பரவாமல் இருக்கும்.. அதிகம் பரவிடுச்சுன்னு  சொன்னா யாராலையும் ஒண்ணுமே செய்ய முடியாது. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள்  இல்லாம ரோட்டில் படுக்க வைத்திருக்கக்கூடிய  சூழலை பார்க்க முடியுது.  இந்தியா போன்ற நாடுகள் நிலைமைய யோசிச்சு பார்க்கனும்.  இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்னு.  இந்தியாவுல இந்த கொரோனா  நோய்க்கான பரிசோதனையை கூட ஒரே நேரத்தில் 500 பேர் போய் நின்னா செய்ய முடியாது.. ஒரே நேரத்தில் 500 பேருக்கு வெண்டிலட்டர் கேட்டா இருக்காது.. அப்படிப்பட்ட ஒரு சூழலை நாம் அந்த இடத்துக்கு போகாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்..  இப்ப நம்முடைய பாதுகாப்பு நம்ம கையில இருக்கு..  ஒவ்வொரு மனிதனுடைய பாதுகாப்பும் உங்களுடைய கைகள் இருக்கு நீங்க வீடுகளில் இருக்கிற வரைக்கும். ஆனா வீட்டை விட்டு நீங்க வெளில போகும்போது  இந்த நோய் உங்களை தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கு .  அதையும் தாண்டி அரசுக்கு நாம் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய சூழல் இருக்கு.. அதனால  இந்த நோயை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும்.. அதனால் வீட்டில் இருப்போம்.. தனிமையில் இருப்போம்..உறவுகளுடன் வீட்டில் இருக்கக்கூடிய உறவுகளோடு மட்டும் சேர்ந்திருப்போம்… பாதுகாப்பாக இருப்போம்.. மருத்துவர்கள் சொல்லக்கூடிய அந்த அறிவுரையை கேட்டு சுத்தமாக இருப்போம்.. இல்லத்தில் இருப்போம்.. இந்தியாவை காப்போம்.. “ என்று வீடியோவில் அமீர் பேசியுள்ளார்.

 

Share this story