"சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காத இயக்கம் "வால்டர் விமர்சனம்

"சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காத இயக்கம் "வால்டர்  விமர்சனம்

அரசியல் வாதியும் போலீசும் மோதிக்கொள்ளும் அரதப்பழைய கதையில், பிறந்த உடனே கானாமல் போகும் குழந்தைகள் என்கிற மறுநாளே கிடைத்து, உடனே இறந்து போகும் மர்மம் ஒன்றை கோர்த்திருக்கிறார்கள். ஆறடி உயர போலீசாக சிபிராஜ் பார்க்க பொருத்தமாக இருந்தாலும் நடிக்க வேண்டிய காட்சிகளில் விழி பிதுங்குகிறார். கும்ப கோணம் அருகில் இருக்கும் ஒரு சின்ன ஸ்டேஷனில் அவர் அஸிஸ்டெண்ட் கமிஷனர்.

"சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காத இயக்கம் "வால்டர்  விமர்சனம்

ஹீரோ இருந்தால் ஹீரோயின் வேண்டும் என்பதற்காக யாமினி சுந்தரா. அந்த ஊர்காரர் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஈஸ்வர மூர்த்தி. அவருக்கு அவரைவிட அதிகம் வில்லத்தனம் செய்யும் ஒரு மகளும் மருமகனும் இருக்கிறார்கள்.சிபிராஜ் எவளவு ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் என்று காட்டுவதற்காக இரண்டு காட்சிகள்,ஒரு என்கவுண்ட்டர்!.இதற்குள் சென்னையில் அரசியல் சூழல் மாறி ஈஸ்வர மூர்த்தியைப் பதவி விலகச்சொல்கிறார் முதல்வர்.அவருக்கு தனது வலதுகரமான பாலுவை (சமுத்திரக்கனி) சுகாதார அமைச்சராக்க உத்தேசம் என்பது தெரிந்ததும்,வால்ட்டரை வைத்து பாலுவை என்கவுண்ட்டர் செய்ய வைக்கிறார் சுகாதார அமைச்சர்.

 

"சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காத இயக்கம் "வால்டர்  விமர்சனம்அவளவுதான் அதற்குப் பிறகு வில்லன்கள் போலீசை விரட்ட போலீஸ் குழந்தைகள் சாகும் மரணத்தை துரத்த ஆளாலுக்கு கத்திக்கொண்டே ஓடுகிறார்கள். அடித்துக் கொள்கிறார்கள், கொள்கிறார்கள். இடையிடையே சிபிராஜுக்கு பாட்டுகள் வேறு, அதிலும் அந்த ஷவர் பாட்டெல்லாம் 1980 ஸ்டைல். இத்தனைக்கும் படத்தில் சமுத்திரக்கனி, நட்டி என்று விவரமான இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள், இருந்தும் இப்படி ஒரு படம். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காத இயக்கம், இசை நடிப்பு. சத்தியராஜ் நடித்த வால்ட்டர் வெற்றிவேல் காலத்தில் வந்திருக்க வேண்டிய படம்.

Share this story