தமிழரசன் படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்ட விஜய் ஆன்டனி !

தமிழரசன் படம் குறித்து  முக்கிய அப்டேட் வெளியிட்ட விஜய் ஆன்டனி !

ஒரு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனியைப் பார்த்த நமக்கு அவரது நடிப்பு சற்று புதிதாகத் தான் இருந்தது. இசையமைப்பாளராக பல வெற்றிகளைக் கண்ட அவர் நடிப்பு என்னும் பகுதிக்குள் நுழைந்தவுடன் அதிலும் தன்னுடைய பாணியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.  சலசலப்பில்லாத அவரது நடிப்பு பலரை ஈர்த்தது. அவரின் இசையில் வெளியான பாடல்களின் லிரிக்குகளை கண்டுபிடிப்பது தான் சற்று கடினம். மற்றபடி அவர் நடிப்பில் தற்போது கைதேர்ந்தவர் ஆகிவிட்டார்.

தமிழரசன் படம் குறித்து  முக்கிய அப்டேட் வெளியிட்ட விஜய் ஆன்டனி !

விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். தற்போது தமிழரசன் படத்தைப் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் ஆன்டனி. 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழரசன் படத்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ள அனைவரும் கிரிக்கெட் சீருடையில் இருப்பதைப் பார்க்கலாம். இரு மாநிலங்களுக்கு இடையேயான அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியாக இருக்கலாம். படத்தில் வில்லன் நடிகர் சோனு சூத்தும் உள்ளார். தமிழக அணிக்காக விஜய் ஆண்டனியும், டெல்லி அணிக்காக சோனுவும்  விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

[video:https://www.instagram.com/p/CBkCWv0Dk3k/?utm_source=ig_web_copy_link]

இதுதவிர, விஜய் ஆண்டனி அக்னிச்சிறகுகள் மற்றும் காக்கி  என்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

Share this story