பத்தொன்பதாம் நூற்றாண்டு! வருகிறது, வினயனின் பிரமாண்ட சரித்திரப் படம்!

பத்தொன்பதாம் நூற்றாண்டு! வருகிறது, வினயனின் பிரமாண்ட சரித்திரப் படம்!

வினயன் மலையாள சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ‘வசந்தியும்,லட்சுமியும், பின்ன ஞானும்’ ( தமிழில் – காசி) கருமாடிக் குட்டன் , குள்ளமான மனிதர்கள் வசிக்கும் அல்புதத் தீவு போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர்.கேரள திரையுலகை எதிர்த்து ஒரு காலத்தில் தனி ஆளாக வழக்காடியவர். இவரது கடைசிப் படமான ஆகாசகங்கா 2 வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்தை அறிவித்து இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டு என்கிற இந்தப் படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றில் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து இதுவரை பேசப்படாத கதைகளை பேசப்போகும் படம் என்று அறிவித்து இருக்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு! வருகிறது, வினயனின் பிரமாண்ட சரித்திரப் படம்!

அந்தக் காலகட்டத்தில் இன்றுள்ள மலையாளிகள் நினைத்துப் பார்க்க விரும்பாத ,அருவருப்பான சட்டங்களும், அவற்றை எதிர்த்து நடந்த போராட்டங்களும், வன்முறைகளும் நிறைந்தது. அதனால், வினயன் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கதையை கையில் எடுத்துவிட்டார் என்று மலையாள சினிமா வட்டாரத்தில் இப்போதே பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டன. ஆனால்,வினயன் எதையும் கண்டு கொள்ளாமல் ‘ நண்பர்களே,மிகபிரமாண்டமாகத் தயாராகும் இந்த படத்தில் 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூரை ஆண்டவர்களைப் பற்றியும், அப்போது வாழ்ந்த வீரப் பெண்மணிகளைப் பற்றியும் பேசப்போகிறது.இந்திய சினிமாவிலுள்ள பல பிரபலங்கள் இதில் நடிக்க உள்ளனர்,ஏராளமான புதுமுகங்களும் தேவைப்படுகின்றனர். ஆர்வம் இருப்போர்’ என்று காஸ்டிங் கால் கொடுத்திருக்கிறார்.

[video:https://www.facebook.com/directorvinayan/photos/a.1459274167655701/2523223717927402]

 

Share this story