பிரபல நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி: அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி: அதிர்ச்சியில் திரையுலகம்!

பாலிவுட்டில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். பாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகராக புகழப்படும்  இவர்  கேங்ஸ் ஆஃப் வசேப்பூர், லன்ச் பாக்ஸ், மண்ட்டோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

ttn

உத்தரப்பிரதேசம் புதானா என்ற கிராமத்தில்  சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

பிரபல நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி: அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்நிலையில் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக்  அவருக்கு  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.  இதுகுறித்து காரணம் இன்னும் முறையாக சொல்லப்படாத நிலையில் நவாசுதீன் சித்திக்கிடமிருந்து எந்த பதிலும் வராவிட்டால் 15 நாட்களுக்கு பிறகு சட்டரீதியாக அணுக  ஆலியா சித்திக் முடிவெடுத்துள்ளாராம். இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

Share this story